பா.ஜ.க.வை எதிர்க்க ப.சிதம்பரத்திற்கு புதிய பொறுப்பு -?

SHARE

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்களின் அதிரடி பேச்சுக்கு, சாதுர்யமான பதில் அளிக்க, காங்.,கில் சரியான தலைவர்கள் இல்லை’ என, கட்சி மேலிடம் கருதுவதாக கூறப்படுகிறது. இதற்கு, சரியான அனுபவம் வாய்ந்த மூத்த தலைவரை நியமிப்பது குறித்து, டில்லி தலைமை தீவிரமான யோசனையில் உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் அல்லது ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரில் ஒருவரை, தகவல் தொடர்பு பிரிவின் தலைவராக நியமிக்க, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக, டில்லி வட்டார தகவல் தெரிவிக்கிறது..

இவர்களை தவிர, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் பவன் கேரா மற்றும் சுப்ரியா ஸ்ரீநாத் ஆகியோரும், இந்த பொறுப்பில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் ப,சிதம்பரமே சரியான தேர்வாக இருக்க முடியும் என மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்


SHARE

Related posts

Leave a Comment