கடந்த 5 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டேன் – ஆசிரியர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

SHARE

சென்னையில்  கே.கே.நகரில் உள்ள  பத்ம சேசாத்திரி பள்ளி மாணவியருக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவுத் துணை ஆணையர் பள்ளியில் நேரில் விசாரணை நடத்தினார்.
பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் , பாதிக்கப்பட்ட மாணவியரிடமும் விசாரித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், பாலியல் சர்ச்சையில் சிக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போலீசாரிடம் அளித்ஹ்ட பரபரப்பு வாக்குமூலத்தில், 
கடந்த 5 ஆண்டுகளாக 11,12ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகவும்,  மாணவிகளின் வாட்ஸ் ஆப் மூலம் சாட் செய்து பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் கூறியுள்ளார்.
பாலியல் புகார் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும், செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை ராஜகோபாலன் நீக்கி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் தன்னைப் போன்று மேலும் சில கருப்பு ஆடுகள் உள்ளதாக ராஜகோபாலன் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment