இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
புத்தாண்டில் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி,
சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலா வெளியே வந்தாலும், அதிமுக உடன் இணைய 100% வாய்ப்பு இல்லை. ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் சசிகலா.
புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுத்தேன். அழைப்பை ஏற்றுக் கொண்டு தமிழகம் வருவதாக பிரதமர் தெரிவித்தார். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை.