கொரோனா அச்சுறுத்தல் – குளிர்கால தொடர் ரத்து

SHARE

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடாளுமன்ற குளிர்கால தொடர் ரத்து செய்யப்படுவதாக, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாத இறுதியில் நடத்தப்படுவது வழக்கம். தற்போது கொரோனா பரவல் காரணமாக குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. குளிர்கால கூட்டத்தொடரை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், பட்ஜெட் கூட்டத்தொடருடன் குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, வேளாண் சட்டம் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு தொடரை கூட்ட வேண்டும் என, சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு, காங்கிரஸ் கட்சியின் லோக்சபா குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியிருந்தார்


இதற்கு பதிலளித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி எழுதியுள்ள கடிதத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுகிறது.

இது தொடர்பாக, லோக்சபாவில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர், முன்கூட்டியே கூட்டலாம் என தெரிவித்துள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment