ஜெர்மனிக்கு துருக்கியில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், பயணிகள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று ஜெர்மனி வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டிருந்தது.
இதற்கிடையில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து பிகாசஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் கடந்த 25-ம் தேதி ஜெர்மன் நாட்டின் ஹம்பர்க் நகருக்கு புறப்பட்டது.
துருக்கி நாட்டின் பிகாஸ் ஏர்லைன்ஸ் பிற ஏர்லைன்ஸ் நிறுவனங்களை ஒப்பிடும்போது பயண கட்டணம் மிகக்குறை.
ஹம்பர்க் புறப்பட்ட அந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். அந்த விமானத்தில் 55 வயதுடைய நபர் ஒருவரும் பயணம் செய்துள்ளார். விமானம் ஹம்பர்க் விமான நிலையம் வந்தடைந்தபோது அந்த 55 வயது நபர் தனது இருக்கையில் உறங்கியவாறு இருந்துள்ளார். அவரை விமான ஊழியர்கள் எழுப்பியுள்ளனர். ஆனால், அந்த நபர் கண் விழிக்கவில்லை.
இதனால், சந்தேகமடைந்த விமான ஊழியர்கள் விமானத்தில் பணியில் இருந்த மருத்துவ ஊழியருக்கு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த நபரை மருத்துவ ஊழியர் பரிசோதனை செய்துள்ளர். அப்போது, அந்த பயணி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து உயிரிழந்த அந்த 55 வயது பயணியின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் உயிரிழந்த பயணிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
துருக்கியில் இருந்து ஜெர்மனி வர இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் போதும் என்பதால் அந்த பயணிக்கு துருக்கி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போதே அந்த 55 வயதான பயணி உயிரிழந்துள்ளார் என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கொரோனாவால் அந்த பயணி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.