ஆந்திராவில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள இந்து கோயில் கோபுரங்கள் மற்றும் சுவாமி சிலைகள் தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டு வந்தன. அந்தர்வ வேதி லட்சுமி நரசிம்மர் கோயில் தேர் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டதும்; விஜயநகரத்தில் கோதண்டராமர் சிலையின் தலை உடைக்கப்பட்டு வேறொரு இடத்தில் வீசப்பட்டதும் . ஜெகன்மோகன் அரசுக்கு இதில் தொடர்பு உள்ளதாக, பா.ஜ., தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த சம்பவங்கள் தொடர்பாக சிஐடி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், கோயில் சிலைகளை சேதப்படுத்தியது தொடர்பாக, காக்கிநாடாவை சேர்ந்த பாஸ்டர் பிரவீன் சக்ரவர்த்தி என்பவன் உட்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர். யூ டியூப் சேனலில் பேசிய பிரவீன், ஆந்திராவில் இந்துக்களை மதம் மாற்றுவதே எங்கள் முக்கிய பணி. 699 கிராமங்களை கிறிஸ்தவ கிராமங்களாக மாற்றி உள்ளோம். மதம் மாறியவர்களின் கையாலேயே கோயில் சிலைகளை உடைக்க வைத்தோம் என்று குறிப்பிட்டு இருக்கிறான். அதன் அடிப்படையில் பாஸ்டர் பிரவீன் மீது மதக்கலவரம் உண்டாக்குதல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சைலம் சென்னடர் என்ற கிறிஸ்தவ அமைப்பை நடத்தி வரும் பிரவீன் சக்கரவர்த்தி, வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று, மத மாற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளான். அவனுடன் 3,642 மதபோதகர்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். சைக்கோ பாஸ்டரின் வங்கி கணக்கை முடக்கியுள்ள போலீசார், வேறு எங்கெல்லாம் மதம் மாற்றும் செயலில் ஈடுபட திட்டமிட்டுள்ளான். அவனுடன் தொடர்பில் இருப்பவர்கள் யார் என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.