மலேசியாவில் பெரியார் பிறந்த தின கொண்டாட்டம் – சுயமரியாதைக் கோட்டை என புகழாரம்

SHARE

செய்தியாளர் குணாளன் – கோலாலம்பூர்

மலேயசியத் திருநாட்டில் யாராளும் அசைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெரியாரின் சுயமரியாதைக் கோட்டை அடித்தளம் அமைக்கப்படுள்ளது என மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் ( மதிக) ச.த அண்ணாமலை பேசினார்.

தந்தை பெரியாரின் 142 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ச.த.அண்ணாமலை தலைமை தாங்கினார் , மலேசிய தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் பெரியார் செய்த சாதனைகள், அவரின் ஆற்றல் மிக்க கருத்து, பெரியாரின் சமூகநீதி போராட்டம், குறித்தும், உலகலாவிய நிலையில் உள்ள திராவிட மக்கள் குறிப்பாக தமிழர்களின் வாழ்க்கை,வாழ்வாதாரம், வளமிக்க சிந்தனை மாற்றம் குறித்து சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க நல்லுரையாளர் மன்னர் மன்னன் மருதை தந்தை பெரியாரின் அடிப்படைக் கோட்பாடுகள், அவரின் போதனைகள், பெரியார் பெற்ற விருதுகள், பெரியாரின் வாழ்க்கையும் சமுதாய பங்களிப்பும்,என்ற பல்வேறு விசயங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

மலேசிய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் சா.ர.பாரதி, பொதுச்செயலாளர் பொன்.பொன்வாசகம், பொருளாளர் கிருட்ணன் ,மத்திய செயலவை பொருப்பாளர்கள், பங்கேற்றனர். பிறந்தநாள் விழாவை யோகி சந்துரு சிறப்பாக வழிநடத்தினார். விழாவில் பெரியாரின் 142 ஆம் ஆண்டு விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.


SHARE

Related posts

Leave a Comment