இங்கிலாந்தின் புதிய பசுமை தொழில்துறை புரட்சிக்கான திட்டங்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று வெளியிட்டார்.
அதன் ஒரு பகுதியாக 2030-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படும் என அவர் அறிவித்தார்.
மேலும் உலகின் ஒவ்வொரு நாடும் குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் அடுத்த தலைமுறையினருக்காக பூமியை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
2030-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்தில் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் மற்றும் வேன்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்படும். இந்தத் திட்டம் இங்கிலாந்தின் தேசிய உள்கட்டமைப்பை மின்சார வாகனங்களுக்கு சிறந்த ஆதரவாக மாற்றுவதில் கவனம் செலுத்தும். இதன் மூலம் சாலைப் போக்குவரத்தை ‘டி கார்போனைஸ்’ (கார்பன் வாயு அளவை குறைத்தல்) செய்த முதல் ‘ஜி7’ நாடாக இங்கிலாந்து திகழும்.