அமெரிக்காவின் பைசர் தடுப்பு மருந்து நிறுவனம் தற்போது 95 சதவீதம் பலனளிக்கும் சக்தி வாய்ந்த கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனை ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், பைசர் – பயோ என்டெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வரும் எனவும் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் பைசர் தடுப்பூசியை பொது பயன்பாட்டுக்கு அனுமதித்த முதல் நாடு பிரிட்டன் ஆகும். ஏற்கனவே ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் 5 தடுப்பூசி அந்த நாட்டில் பயண்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.