உயிர்த்தெழுவார் என தாயின் உடலை வைத்து பிரார்த்தனை செய்த சைக்கோ மகள்கள்

SHARE

மணப்பாறை அருகே உயிரிழந்த தாயின் உடலை மூன்று நாட்களாக  வைத்து அவரது மகள்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவதாக கிராம மக்களின் புகாரைத்தொடர்ந்து உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சொக்கம்பட்டியை சேர்ந்தவர் மேரி. இவர கடந்த 2 நாட்களுக்கு முன் உயிரிழந்து விட்டார். அவரின் உடலை வைத்து அவருடைய மகள்கள் இருவர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இவர்களின் குடும்பம் பிரபல கிருத்தவ மத போதகர் ஒருவரின் தொடர்பாளர்கள் என தெரிகிறது
தகவலையடுத்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசாரை வீட்டிற்குள் விட  மகள்கள் இருவரும் மறுத்தனர். பின் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதவியுடன் போலீசார் அந்த பெண்கள் இருந்த வீட்டிற்கு சென்றபோது அங்கு எந்தவித அசைவுமின்றி 75 வயது மூதாட்டி மேரியின் உடல் படுக்கையில் இருந்தது. அவரது அருகில் மகள்கள் ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி இருவரும் தாய் மேரி கோமா நோயில் இருப்பதாகவும், அவருக்கு வீட்டிலேயே வைத்து சிகிச்சை செய்து வருவதாகவும் கூறினர்.
மேலும் போலீசாரை தடுத்து நிறுத்திய ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி இருவரும், தங்களது தாயரை கொல்லப்பார்ப்பதாக கூறி காவல்துறையினரை மிரட்டினர். 

மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் போல் அவர்களின் நடவடிக்கை இருந்ததை
தொடர்ந்து வருவாய் வட்டாட்சியர் நிகழ்விடத்துக்கு சென்று, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அங்கு மேரியின் உடலை பரிசோதனை செய்தனர்.

அப்போது மேரி உயிருடன் இல்லை என்பது தெரிய வந்தது.
இருப்பினும் ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி இருவரும் அடம்பிடித்து மேரி உயிருடன் தான் உள்ளார் என வாதாட தொடங்கினர்.
அதனைத்தொடர்ந்து அவர்களிடம் சமாதானமாக பேசிய போலீசார் அரசு மருத்துமனையில் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கலாம் எனக்கூறி மேரியின் உடலை அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மூதாட்டி மேரியை பரிசோத்த மருத்துவர் அவர் உயிருடன் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். மருத்துவரிடம் வாதாடி போராடிய ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி இருவரும் மேரியின் உடலை தர மறுத்து அழுதும், புலம்பினர்.
 ஒருவழியாக அவர்களுக்கு  சமாதானப்படுத்தி உறவினர்களுடன் காலையில் வந்து பார்த்து உடலை எடுத்துச்செல்லுங்கள் எனக்கூறி மேரியின் உடலை பிணவறைக்கு எடுத்து சென்றனர்.
மூதாட்டி மேரியின் உடலை மீட்டு வர கொட்டும் மழையில் போலீசார் சுமார் 4 மணி நேரம் போராட்டம் நடத்தி  உள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த மூதாட்டி மேரி இரு தினங்களுக்கு உயிரிழந்து விட்டதாக தெரிகிறது.இருந்தபோதிலும் மூதாட்டி மேரியின் உடலை வைத்து சிகிச்சை அளிப்பதாகவும், பிரார்த்தனையில் ஈடுபட்டால் மூதாட்டி மேரி எழுந்து சுகமடைவார் என்றும் கூறி மகள்கள் ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி மூன்று நாள்களாக  பிரார்த்தனை நடத்தி உள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment