துவங்கியது கூட்டத்தொடர்-பிரதமர் மோடி திடீர் பேட்டி

SHARE

நாடாளுமன்ற மழை கால கூட்டத்தொடர் புதிய நடைமுறையுடன் இன்று துவங்கியது.நீண்ட நாட்களுக்கு பின் பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய மோடி நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எம்பிக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

கொரோனா முடிவுக்கு வரும் வரை அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும். உலகின் எங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மோடி தெரிவித்தார்.

லடாக் எல்லையில்ராணுவ வீரர்கள் சோதனைகளை எதிர்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் பிரமர் பேசினார்.

இதனிடையே மழைக்கால கூட்டத்தொடருக்காக இன்று வருகை தந்த திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நீட் தேர்வுக்கு எதிரான வாசகத்துடன் கூடிய மாஸ்க்கை அணிந்தும் புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு ஆகியவற்றை திரும்ப பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீட் தேர்வை கைவிட வலியுறுத்தும் பதாகைகளையும் எம்.பி.க்கள் கைகளில் ஏந்தி இருந்தனர்.


SHARE

Related posts

Leave a Comment