ஆவடி, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கான ஸ்டேஷன் எல்லைகள் – அறிவிப்பை வெளியிட்டார் டி.ஜி.பி., சைலேந்திரபாபு

SHARE

 ஆவடி, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கான போலீஸ் ஸ்டேஷன் எல்லைகள் குறித்த அறிவிப்பை தமிழக போலீஸ் டி.ஜி.பி., சைலேந்திரபாபு வெளியிட்டார்.

சென்னை மாநகரம் விரிவடைந்து காணப்படுகிறது. ஒரு போலீஸ் கமிஷனர் மட்டும் இதை நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து போலீஸ் நிர்வாக வசதிக்காக தாம்பரம், ஆவடி என இரண்டாக பிரிக்கப்பட்டது. ஆவடி போலீஸ் கமிஷனராக ஏ.டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரம் போலீஸ் கமிஷனராக ஏ.டி.ஜி.பி., ரவி நியமிக்கப்பட்டு அவர்களுக்கு உண்டான போலீஸ் ஸ்டேஷன் எல்லைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தாம்பரம்


அதன்படி, தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு 20 போலீஸ் ஸ்டேஷன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு: தாம்பரம், குரோம்பேட்டை, செய்யூர், சிட்லப்பாக்கம், பீர்க்கங்கரணை, குன்றத்துார், பல்லாவரம், சங்கர்நகர், பள்ளிக்கரனை, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகிநகர், கானாத்துார்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து சோமங்கலம், மணிமங்கலம் தாம்பரத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், தாழம்பூர், கேளம்பாக்கம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் தாம்பரம் போலீஸ் கமிஷனரின் கீழ் செயல்படும்.

ஆவடி


ஆவடி போலீஸ் கமிஷனருக்கு 25 போலீஸ் ஸ்டேஷன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு: மில்க் காலனி, ரெட்ஹில்ஸ், மணலி, சேதங்காடு, மணலி நியூ டவுன், எண்ணுார், மாங்காடு, பூணமேலி, நசரத்பேட்டை, முத்துபுதுபேட்டை, பட்டாபிராம், அம்பத்துார் எஸ்டேட், கொரட்டூர், திருவேற்காடு, எஸ்.ஆர்.எம்.சி., ஆவடி, டேங்க் பேக்டரி, திருமுல்லைவாயல், திருநின்றவூர்.
திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து வேலவேடு, செவ்வாபேட், சோழவரம், மீஞ்சூர், காட்டூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் இணைக்கப்பட்டுள்ளன.


SHARE

Related posts

Leave a Comment