இலங்கையில் அதிபருக்கு கூடுதல் அதிகாரம்

SHARE

இலங்கையில் அதிபராக தம்பி கோத்தபய ராஜபக்சே உள்ளார்.  அவரது  சகோதரர் மகிந்த ராஜபக்சே பிரதமராக இருக்கிறார்.

  இலங்கையில் 2015-ல் சிறிசேனா அதிபரானபோது அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத்தின் 19 (ஏ) பிரிவு திருத்தப்பட்டது. 

1978-ம் ஆண்டு முதல் இலங்கையில் அதிபருக்கு இருந்து வந்த அதிகாரங்கள் இந்த சட்ட திருத்தத்தின்மூலம் குறைக்கப்பட்டன. ஆனால் தற்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், அவரது சகோதரர் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் அதிபருக்கு கூடுதல் அதிகாரங்களை தரும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய முடிவு எடுத்தனர்.
இதற்கான அரசியல் சாசன 20-வது திருத்த மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டு ,ஓட்டெடுப்புக்கு விடப்பட்டதில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையுடன் நிறைவேறியது.
225 பேரை கொண்ட நாடாளுமன்றத்தில் மசோதாவுக்கு ஆதரவாக 156 பேரும், எதிராக 65 பேரும் வாக்களித்தனர்..இதன்மூலம் அதிபருக்கு மீண்டும் கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கின்றன.

திடீரென இந்த மசோதாவிற்கான அவசிய என்ன என்பது குறித்த ஆய்வு தகவல்கள் நியூஸ் ஏசியாவில் ஓரிரு நாட்களில் வெளியாகும்


SHARE

Related posts

Leave a Comment