மேற்குவங்கத்தில் தோல்வியடைந்தால்பதவி விலக தயாரா? பா.ஜ., தலைவர்களுக்கு பிரசாந்த் கிஷோர் பாண்டே சவால்

SHARE

மேற்கு வங்க மாநிலத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெற தவறினால், பா.ஜ., தலைவர்கள் பதவி விலக தயாரா என பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்துள்ளார்.

பா.ஜ.,வின் அடுத்த குறி மேற்கு வங்க மாநிலமாக உள்ளது. அங்கு சுற்றுப்பயணம் செய்த அமித் ஷா, வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., 200 இடங்களில் வெற்றி பெறும் என்றார். இதற்கு பிரபல அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ., இரட்டை இலக்கங்களை பெறவே போராடுகிறது, அதை மீறி எதுவும் நடந்தால் டுவிட்டரை விட்டே விலகுகிறேன் என சவால் விட்டிருந்தார்.


இந்நிலையில், தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், 200 தொகுதிகளை பா.ஜ., பெற தவறினால், அக்கட்சி தலைவர்கள் தங்களது பதவிகளில் இருந்து வெளியேறுவோம் என உறுதியளிக்க தயாரா? என சவால் விடுத்துள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment