உயிர் காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி கொடூரமானது என பிரியங்கா விமர்சனம்

SHARE

கொரோனாவுக்கு எதிரான போரில் உயிர் காக்கும் மருந்துகள், உயிர் காக்கும் மருத்துவக் கருவிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது கொடூரமானது என காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா விமர்சித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டில்லியில் இன்று நடந்து வருகிறது. காணொலி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கு விதிக்கப்படும் ஐந்து சதவீத ஜிஎஸ்டியை ரத்து செய்வது, கொரோனா தொடர்பான முக்கிய மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றுக்கு வரிவிலக்கு அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசுகள் முன்வைத்தாக தெரிகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு ஆம்புலன்ஸ்களுக்காகவும், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்காகவும், வென்டிலேட்டர்களுக்காகவும், ஆக்சிஜன்களுக்காகவும், மருந்து, தடுப்பூசிகளுக்காகவும் தடுமாறி வருகிறார்கள். ஆனால், உயிர் காக்கும் பொருட்கள், மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விதித்து வசூலிப்பது கொடூரத்தையும், உணர்வற்ற நிலையையும் காட்டுகிறது. அதை உடனடியாக நீக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment