மக்கள் வரி பணத்தை விளம்பரத்திற்கு பயண்படுத்தும் மோடி – பிரியங்கா குற்றச்சாட்டு

SHARE

 பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் கிடைத்த வருவாயை மத்திய அரசு என்ன செய்கிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில், 2020ம் ஆண்டில் மத்திய அரசு உற்பத்தி வரியை உயர்த்தியதால், பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டுகிறது. 2020ம் ஆண்டில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதன் மூலம் கூடுதலாக ரூ.3 லட்சம் கோடி கிடைத்துள்ளது. மக்கள் நிவாரணத்துக்கு இந்த ரூ.3 லட்சம் கோடியைச் செலவிடுவதற்குப் பதிலாக இந்தப் பணம் எங்கே செல்கிறது விளக்கம் கொடுங்கள்? மத்திய அரசு, ரூ.20 ஆயிரம் கோடி பார்லி கட்டடம் கட்டுவதற்கும், ரூ.16 ஆயிரம் கோடி பிரதமர் மோடிக்குப் புதிய விமானம் வாங்கவும், ரூ.2 கோடி நாள்தோறும் விளம்பரச் செலவுக்கும் பயன்படுத்துகிறது. என பதிவிட்டுள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment