விவசாயிகளை, முதலாளிகளின் அடிமைகளாக்க முயற்சி – மோடி மீது ராகுல் தாக்கு

SHARE

விவசாயிகளை, முதலாளிகளின் அடிமைகளாக மாற்ற நினைக்கும் மோடி அரசின் திட்டம் வெற்றி பெறாது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

விவசாயிகளின் விளைபொருட்கள் வர்த்தக மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள், நாடாளுமன்ற மக்களவயில் அண்மையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள், விவசாயிகளுக்கு எதிரானது என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில், மாநிலங்களவையில் இந்த மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்து வருகிறது.

இந்த மசோதா தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் :
மோடி அரசின் இந்த ,விவசாயிகளுக்கு எதிரான சட்டம் மூலம்,
குறைந்த பட்ச ஆதார விலைக்கு ஏன் உத்தரவாதம் அளிக்கவில்லை.
விவசாயிகளை, முதலாளிகளின் அடிமைகளாக்க மோடி முயற்சி செய்கிறார். இதனை நாடு ஒரு போதும் வெற்றி பெற அனுமதிக்காது. என பதிவிட்டுள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment