“பாஜக இன்னும் எந்தெந்த வழிகளில் எல்லாம் நாட்டை கொள்ளையடிக்கும்? – ராகுல்கேள்வி

SHARE

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. 
இந்த விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, 
“ஜிஎஸ்டி வரிமுறை நொறுங்கியுள்ளது. வேலைவாய்ப்பின்மை உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ” இன்னும் எந்தெந்த வழிகளில் நாட்டை பாஜக கொள்ளையடிக்கும்?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.SHARE

Related posts

Leave a Comment