தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு, அனைத்து கட்சியினரும் தயாராகி வருகின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை, தமிழகத்துக்கு அழைத்து வந்து பிரசாரம் செய்ய அந்த கட்சி திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ராகுல் தமிழகக்ததில் மறைமுக தேர்தல் பிரச்சாரத்தை துவங்குகிறார்.
அவர் கொங்கு மண்டலத்தில், மூன்று நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். இதற்காக வரும், 23ம் தேதி காலை டில்லியில் இருந்து ராகுல் கோவை வருகிறார்.
கோவை விமான நிலையத்தில், அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க, கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, ‘சிட்ரா’ சந்திப்பில், அவர் பொதுமக்கள் இடையே பேச உள்ளார். தொடர்ந்து, கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும் கூட்டத்தில், சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களை சந்திக்கிறார். தொடர்ந்து, திருப்பூர் செல்லும் ராகுல், அங்கு தொழில் துறையினர் உட்பட பலரையும் சந்திக்கிறார். 24ம் தேதி காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
ராகுல் தமிழகம் வருவதால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.