மோடி அரசின் ஆணவமே பொருளாதாரத்துக்கு பேரழிவை கொண்டுவந்துள்ளது: ராகுல்

SHARE

: ‛அரசின் முடிவற்ற ஆணவம்தான் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்குப் பேரழிவைக் கொண்டுவந்துள்ளது,’ என ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் மசோதாக்கள் மாநிலங்கள் அவையில் நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதுடன், காகிதங்களைக் கிழித்து அவையின் துணைத் தலைவர் மீது எறிய முயன்றனர். இதனால் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வரம்பு மீறி நடந்து கொண்டதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜ., சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக டெப்ரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜூ சதவ், கேகே ராஜேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நசீர் ஹூசைன், எலமாரன் கரீம் ஆகியோரை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். 8 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டதாவது: ஜனநாயக இந்தியாவில் பேசவிடாமல் அடக்குமுறை தொடர்கிறது. முதலில் பேசவிடாமல் தடுத்தார்கள், அடுத்து நாடாளுமன்றத்திலிருந்து எம்.பி.,க்களை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். கறுப்பு வேளாண் சட்டங்கள் குறித்த விவசாயிகளின் கவலைகளை அறியாமல் அரசு கண்களைக் மூடிக்கொண்டது. அனைத்தும் அறிந்ததாக கூறிக்கொள்ளும் இந்த அரசின் முடிவற்ற ஆணவம்தான் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்குப் பேரழிவைக் கொண்டுவந்துள்ளது. இவ்வாறு கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment