காங்கிரஸ் போல் வேறு எந்த கட்சியிலும் கருத்துவேறுபாடுடைய தலைவர்கள் இருக்க முடியாது – ராகுல் ஒப்புதல்

SHARE

காங்கிரஸ் கட்சிக்கு நிலையான தலைவர் தேவை என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டு சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய குலாம் நபி ஆசாத், கபில் சிபல் , ஆனந்த் சர்மா, பூபேந்திர சிங் ஹூடா, மனீஷ் திவாரி உள்ளிட்டவர்கள் காங்கிரசில் 23 ஜி தலைவர்கள் என அழைக்கப்ப்டுகிறார்கள்.  ராகுல்காந்தி இதுவரை அவர்கள் குறித்து வெளிப்படையாக பேசியது இல்லை. இந்த  நிலையில் டெல்லியில் நடந்த நிக்ழச்சி ஒன்றில் முதல் முறையாக அவர்கள் குறித்து ராகுல் பேசியிருக்கிறார்.
அரசியல் விஞ்ஞானி என அழைக்கப்படும் அசுதோஷ் வர்ஷ்னி என்பவர் நடத்திய பிரவுன் பல்கலைக்கழகத்துடனான ஒரு உரையாடலில் காங்கிரஸ் முன்ளாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி பங்கேற்று பதிலளித்தார்
காங்கிரஸ் இயற்கையாகவே ஜனநாயகமானது.  காங்கிரசில் கருத்து வேறுபாடுடைய தலைவர்கள் பாஜக அல்லது பகுஜன் சமாஜ் கட்சி அல்லது திரிணாமுல் காங்கிரசில்  இருக்க முடியுமா? இல்லை, அவர்கள் வேறு எந்த கட்சியிலும் இருக்க முடியாது. காங்கிரசில், நாங்கள் அவர்களுடன்  உடன்படவில்லை என்று கூறுகிறோம், ஆனால் விவாதம்  தொடர வேண்டும். ”
காங்கிரசில் இருந்து கொண்டு பற்றி வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட 20 தலைவர்கள் அடங்கிய குழு பாஜக போன்ற வேறு எந்தக் கட்சியிலும் இருக்க முடியாது . ஆனால் அந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு  சிறந்த இடத்தை காங்கிரஸ் கொடுத்து உள்ளது.
அண்மையில் இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக நிதி ஆதிக்கமும் தகவல்தொடர்பு கட்டுப்பாடும் இருக்கிறது.


SHARE

Related posts

Leave a Comment