வந்துவிட்டது சுற்றுலா செல்ல வாடகை ரெயில்கள்-ரெயில்வே அறிவிப்பு.

SHARE

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில், ‘பாரத் கவுரவ்’ என்ற பெயரில் சுற்றுலா ரெயில்களை இயக்க ரெயில்வேத்துறை முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 190 ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, முக்கிய நிகழ்ச்சிகள் தொடர்பான பயணங்களுக்கு தனியார் சுற்றுலா நிறுவனங்களோ அல்லது மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்களோ ரெயில்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான உரிய வாடகையையும் அந்நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வரவேற்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இத்திட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா, ராஜஸ்தான், உள்ளிட்ட மாநிலங்கள் ஆர்வமுடன் இருப்பதாக ரயிவேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment