அடுத்த 48 மணி நேரத்திற்குதமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை மையம் தெரிவித்திருந்தது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், ஒருசில இடங்களில் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னையில் நேற்றிரவு 3 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர், கோடம்பாக்கம், வடபழனி, அசோக் நகர், விருகம்பாக்கம், ஆலந்தூர், அண்ணா சாலை, அண்ணா நகர், வேளச்சேரி, அடையாறு, திருவான்மியூர், தரமணி ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது.
ஈக்காட்டுதாங்கல் மடிப்பாக்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் அதிகாலை வரை விட்டுவிட்டு மழை பெய்தது. இந்த மழை காரணமாக நகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.