9 மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பில் ரஜினி – மீண்டும் தொடங்கியது ‘அண்ணாத்த’

SHARE

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் குஷ்பு, நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர்.

கிராமத்து கதையம்சத்தில் தயாராகும் இதன் படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கி 40 சதவீதம் முடித்து விட்டது.

பின்னர் கொரோனாவால் படப்பிடிப்பு முடங்கியது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னால் பெரிய நடிகர்களின் படப்பிடிப்புகளை ஆரம்பித்தனர். ஆனால் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்காமலேயே இருந்தது. ரஜினிகாந்த் பாதுகாப்பை கருதி கொரோனா முற்றிலும் ஒழிந்த பிறகே படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கியது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்தார். வேட்டி சட்டையில் மேக்கப்புடன் கிராமத்து தோற்றத்தில் இருக்கும் ரஜினிகாந்த் புகைப்படம் வெளியாகி வைரலாகிறது. கொரோனா முன்எச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.


SHARE

Related posts

Leave a Comment