தேசியத்தையும், தெய்வீகத்தையும் நம்பும் ரஜினி, அத்தகைய அரசியல் நடத்தும் பா.ஜ.,வை ஆதரிப்பார், என, பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய முருகன்,தமிழகம் முழுதும் இரண்டு நாட்களாக, பா.ஜ., சார்பில், நம்ம ஊர் பொங்கல் விழா சிறப்பாக நடந்தது. ஜனவரி14-ல் சென்னை மதுரவாயலில் நடக்கும் பொங்கல் விழாவில், தேசிய தலைவர் நட்டா கலந்து கொள்கிறார் என்றார்.
கன்னியாகுமரி இடைத்தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ., தயாராக இருக்கிறது. அது நிர்ணயிக்கப்பட்ட வெற்றியாக அமையும். தேசியத்தையும், தெய்வீகத்தையும் நம்பும் ரஜினி, அத்தகைய அரசியல் நடத்தும், பா.ஜ.,வை ஆதரிப்பார்,எனவும் முருகன் நம்பிக்கை தெரிவித்தார்.