மன்றத்தில் உள்ளவர்கள் எந்த கட்சியிலும் இணையலாம் – ரஜினி அறிவிப்பு

SHARE

ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகி வி.எம்.சுதாகர் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 
 * ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்.
* மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணையலாம். 
* வேறு கட்சிகளில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் ரஜினி ரசிகர்தான் என்பதை மறுந்துவிடக்கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில் செல்வானந்த், தேனி மாவட்ட செயலாளர் ஆர்.கணேசன் ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்பு நேற்று திமுகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.SHARE

Related posts

Leave a Comment