கொரோனா பரவல் காரணமாகவும், உடல் நலம் கருதியும் நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி துவக்க மாட்டார் என, சமூக வலைதளங்களில் அவரின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்த ரஜினிகாந்த், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் உண்மையானவை என ஒப்புக் கொண்டார்.
இதனால், ரஜினி காந்த் கட்சி துவக்குவாரா மாட்டாரா என்ற கேள்வி, அரசியல் வட்டாரங்களில் எழுந்தது.
அரசியல் நிலைப்பாடு குறித்து, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என டுவிட்டர் வாயிலாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை, ராகவேந்திரா திருமண மண்டபத்தில், மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினா. இந்த ஆலோசனையின் போது, கட்சி தொடங்கினால் தற்போதைய சூழலில் வரவேற்பு எப்படி இருக்கும்? என ரஜினிகாந்த் நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
மேலும், மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை எனக்கூறிய ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்; அதுவரை பொறுத்திருங்கள் என்று கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி காந்த் மாவட்ட செயலாளர்களுடனான சந்திப்பில் அவர்களுடைய கருத்துகளை கூறினார்கள். நானும் எனது கருத்தை பகிர்ந்துக்கொண்டேன். நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் கூட இருக்கிறோம் என நிர்வாகிகள் உறுதியளித்தனர். நான் என் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
எப்போம் போலவே ரஜினிகாந்த் கேட்டதையே திரும்ப கேட்டதாலும் வழக்கம் போல, வர வேண்டிய நேரத்தில் வருவோம் என ரஜினிகாந்த் தெரிவித்தால் அவரது ரசிகர்கள் விரக்தியடைந்துள்ளனர்
1 comment
கட்சி தொடங்கினால் பலன் கிட்டுமா? என்பதைப் பற்றி ரஜினி வருடக் கணக்கில் யோசித்து வருகிறார். அவருடைய ஆயுட்காலத்திற்குள் அதுபற்றி அறிவித்துவிட்டால் என்னைப் போன்றவர்கள் நிம்மதியாக இருப்போம்.