அரசியலுக்கு வரமாட்டார் ரஜினி ?

SHARE

உடல் நலனை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரும் முயற்சியை ரஜினிகாந்த் கைவிட்டுவிட்டதாக பரபரப்பு தகவல்கள் உலா வருகின்றன.

திரை உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தாம் அரசியலுக்கு வரப்போவதாக தனது திரைபடங்களில் சூசகமாக தெரிவித்து வந்தார்.

கடந்த வருடம் தனது ரசிகர்களை சந்தித்த அவர்,தான் அரசியலுக்கு வருவது உறுதி என தெரிவித்திருந்தார்.

மீண்டும் குழப்பம்

இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பரவிய நிலையில் உடல் நிலை காரணமாக வீட்டிலேயே முடங்கினார் ரஜினி. கடந்த 6 மாதங்களாக அவர் வெளியே வரவில்லை.

ஆனால் தனது பண்ணை வீட்டிற்கு மட்டும் அவ்வப்போது சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று வாட்சப்பில் ஒரு தகவல் மிக வேகமாக பரவியது. அதில் மருத்துவர்கள் எச்சரிக்கையை தொடர்ந்து ரஜினி அரசியல் கட்சி துவங்கும் முடிவை கைவிட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தகவல் குறித்து ரஜினிகாந்த் தரப்பில் இருந்து,இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


SHARE

Related posts

Leave a Comment