தமிழகத்தில் மீண்டும் ரெட் அலர்ட்

SHARE

தமிழகத்தில் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் ‛ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தமான் கடல்பகுதி மற்றும் வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டு தற்போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்துள்ளது. மேலும் இது அடுத்த 36 மணி நேரத்தில் வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 இதன் காரணமாக,டிச,2ம் தேதி தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மாநிலம் முழுவதும் ‛ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் டிசம்பர் 1,2 தேதிகளில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் கேரளாவின் பத்தனம்திட்டா, ஆழப்புழை, கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர்.,1 ல் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது

டிசம்பர்.,2 ம் தேதி: கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில், அதிகனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி, தேனி, தூத்துக்கடி, விருதுநகர் மாவட்டங்களில்,மிக கனமழையான, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


SHARE

Related posts

Leave a Comment