சென்னைக்கு மீண்டும் “ரெட்” அலர்ட் – இன்று நள்ளிரவு முதல் கடும் மழைக்கு வாய்ப்பு.

SHARE


தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,ராணிப்பேட்டை உளளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு மற்றும் அதிகாலையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக,சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே போல் வானிலை ஆய்வாளர் ப்ரதீப் ஜான் இன்று இரவு,நள்ளிரவு,அதிகாலையில் மேற்கூறிய 5 மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்ய வாய்ப்பள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.

மேக வெடிப்புக்கு வாய்பிருப்பதாகவும் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதே போல,செங்கல்பட்டு, திருவண்ணாமலை கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


SHARE

Related posts

Leave a Comment