பி.எம்.சி., எனப்படும் பெருநகர மும்பை மாநகராட்சி, நாட்டின் மிகப் பணக்கார மாநகராட்சியாக விளங்குகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு இதன் வருவாய் குறைந்தபோதும், வங்கிகளில் அதற்குள்ள நிலையான வைப்புத் தொகையின் அளவு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
மும்பை மாநகராட்சிக்கு 82 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, நிலையான வைப்பு தொகை உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட அதிகமாகும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், 343 நிலையான வைப்புத் தொகை கணக்குகளை மும்பை மாநகராட்சி நிர்வகித்து வருவதாகவும், அதன் வாயிலாக ஆண்டுக்கு 1,800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வட்டி பெறுவதும் தெரிய வந்துள்ளது.