உக்ரைன் எல்லையில் வீரர்கள் குவிப்பு – படை எடுக்க தயாராக ரஷ்யா

SHARE

கடந்த 1991ம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பின்பு, உக்ரைன் விடுதலை பெற்று தனி நாடாக மாறியது.  கடந்த 2014ம் ஆண்டில் உக்ரைனின் கிரீமியா தீபகற்பம் மீண்டும் ரஷ்யா வசம் சென்றது. இதனை தொடர்ந்து நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைனை சேர்க்க அமெரிக்கா முயற்சித்தது.
இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  உக்ரைன் மீது படை எடுக்க 1.75 லட்சம் ராணுவ வீரர்களை எல்லை பகுதியில் ரஷ்யா நிலை நிறுத்தி உள்ளது .
உக்ரைனிற்கு உதவ, அங்கு ஏவுகணைகள் மற்றும் ராணுவ வீரர்களை நேட்டோ கூட்டமைப்பு நிலை நிறுத்தினால், கடுமையான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று புதின் கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்சரித்தார்.  உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்காமல் தடுக்க, புதினுடன் நீண்ட விவாதம் ஒன்றை நடத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment