முடிவுக்கு வருகிறது மனிதர்கள் மீதான கொரோனா தாக்கம் – ரஷிய நிபுணர் கணிப்பு

SHARE

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் மனிதர்கள் மீதான தாக்கம் முடிவுக்கு வருகிறது என ரஷிய நிபுணர் கணித்துள்ளார். இது குறித்து ரஷிய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் அளித்துள்ள பேட்டியில்.

‘மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸ், இயற்கையில் புதிய புகலிடத்தை தேடுகிறது. தன்னைக் கொல்லாத புதிய விலங்கை இந்த வைரஸ் கண்டால் அதன் உடம்புக்குள் சென்று தங்கியிருக்கும். அங்கிருந்து புதிய தொற்று இலக்கை எதிர்நோக்கி இருக்கும். 
மனித சமூகத்தில் தடுப்பூசி போட்டவர்கள், மீண்டவர்கள் எண்ணிக்கை 70 முதல் 80 சதவீதத்தை எட்டும்போது, கொரோனா வைரஸ் இயற்கையில் ஏதாவது ஒரு விலங்கை புதிய புகலிடமாக அடையும். எனவே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதில் உலக சுகாதார நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment