UmapathyKrishnan
சாம்சங் குழும தலைவர் லீ குன் ஹீ காலமானார்.
கொரியாவில் மட்டும் செயல்பட்டு வந்த சாதாரண நிறுவனமாக இருந்த சாம்சங்கை தனது உத்திகளால் சர்வதேச புகழ்பெற்ற நிறுவனமாக்கிய அந்த நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ, தனது 78-வது வயதில் காலமானார்.
1938-ல் லீ பயுங் சல் என்பவர் சாம்சங் நிறுவனத்தை தொடங்கினார். அவரது மூன்றாவது மகன் தான் லீ குன் ஹீ.
1942-ல் பிறந்த இவர் 1968-ல் குடும்ப நிறுவனமான சாம்சங்கில் இணைந்து பணியாற்ற தொடங்கினார். அவர் தந்தை மறைவை தொடர்ந்து 1987-ல் சாம்சங் நிறுவன தலைவரானார். அந்த சமயத்தில் சாம்சங் விலை மற்றும் தரம் மலிவான பொருட்களை உற்பத்தி செய்தது. லீ நிர்வாகத்தின் கீழ் வந்ததும் பல அதிரடி மாற்றங்களை செய்து சர்வதேச நிறுவனமாக மாற்றினார்.
இவரது காலத்தில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமானது.செல்போன் தயாரிப்பில் கொடிகட்டி பறந்த நோக்கியாவை இல்லாமல் செய்தது சாம்சங்.
ஒரு முறை மாற்றங்கள் குறித்து தனது ஊழியர்களிடம் பேசும் போது, “மனைவி, குழந்தைகளை தவிர எல்லாவற்றையும் மாற்றுவோம்” என கூறினார்.
தென் கொரியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான லீயின் சொத்து மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடி . அவரது மறைவு குறித்து சாம்சங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல்நல குறைவால் ஞாயிறன்று லீ காலமானார். சாம்சங்கில் உள்ள நாம் அனைவரும் அவரது நினைவைப் போற்றுவோம். அவருடனான பயணத்திற்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.” என தெரிவித்துள்ளது.
தென்கொரியாவை உலகறிய செய்த நிறுவனங்கள் இரண்டு ஒன்று Hundai மற்றொன்று samsung என்றால் அது மிகையல்ல.

சாதனைகள் பல செய்தாலும் சில சறுக்கல்களையும் லீ குன் ஹீ சந்தித்துள்ளார். முன்னாள் அதிபருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் இருமுறை குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
வரி ஏய்ப்பு மற்றும் மோசடி குற்றச்சாட்டும் இவர் மீது வைக்கப்பட்டது. . சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் அதிபர் பொது மன்னிப்பு வழங்கினார். 2010-ல் மீண்டும் சாம்சங் தலைவரானவர்.
தங்கள் தாய்நாட்டை உலகஅளவில் உயர்த்தியவர் என்ற வகையில் தென் கொரிய மக்கள் லீ குன் ஹீ வுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.