மத்திய புலனாய்வு அமைப்புகள் பாரதிய ஜனதாவின் கூலிப்படையாக வேலை செய்கின்றன – சிவசேனா

SHARE

மத்திய புலனாய்வு அமைப்புகள் பா.ஜனதாவின் கூலிப்படையாக வேலை செய்வதாக சஞ்சய் ராவத் எம்.பி. விமர்சித்து உள்ளார். 

மராட்டியத்தில் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல ஏக்னாத் ஷிண்டே உள்ளிட்ட சில அமைச்சர்களும் அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர்.

சமீபத்தில் துணை முதலமைச்சர் அஜித்பவாரின் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்தநிலையில் மத்திய புலனாய்வு அமைப்புகள் பா.ஜனதாவின் கூலிப்படையாக வேலை செய்வதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சாம்னாவில் விமர்சித்து உள்ளார்.

மராட்டியத்தில் சட்டத்தின் ஆட்சி அல்லது சோதனையின் ஆட்சி நடக்கிறதா?. மத்திய முகமைகளின் தொடர் சோதனைகளை பார்க்கும் போது ஒருவரின் மனதில் இந்த கேள்வி தான் எழும். முன்பெல்லாம் டெல்லி ஆட்சியாளர்கள் பொய் தான் கூறி வந்தனர். தற்போது முதலீடு இல்லாமல் அடிக்கடி சோதனைகளுக்கு உத்தரவிடுவது புதிய தொழிலாகி உள்ளது. மக்களின் வரிப்பணமும், அரசு எந்திரமும் அரசியல் எதிரிகளை அழிக்க பயன்படுத்தப்படுகிறது. முன்பு மும்பையில் கூலிப்படை கொலை அடிக்கடி நடந்தன. எதிரிகளை அழிக்க கூலிப்படையை ஏவினார்கள். தற்போது அது ‘அரசின் கொலைகளாக’ மாறி உள்ளன. டெல்லியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சியின் கூலிப்படையாக மத்திய முகமைகள் வேலை செய்து வருகின்றன. இந்த முகமைகள் மூலம் தேவையில்லாத அரசியல் எதிரிகளை அழிப்பது புதிய கொள்கையாகி உள்ளது. பிரதமர் பெயரில் நிதிமந்திரி நவாப் மாலிக்கின் மைத்துனர் சமீர் கான் போதை பொருள் வைத்திருந்ததாக 8 மாதம் ஜெயிலில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் வைத்திருந்தது மூலிகை புகையிலை என கூறி அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது. எனவே நவாப் மாலிக் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீது வழக்கு தொடர வேண்டும். பரம்பீர் சிங்கை தேடி கண்டுபிடிப்பதை விட்டு விட்டு சி.பி.ஐ. அனில் தேஷ்முக்கின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறது. பிரதமர் நல நிதி விவரங்கள் பொதுவாக அறிவிக்கப்படவில்லை. அந்த பணம் அரசுடையது இல்லை, தனியாருடையது என கூறுகிறார்கள். கோடிக்கணக்கான பணம் பிரதமரின் பெயரில் நிவாரணமாக வசூலிக்கப்பட்டுள்ளது இதை பற்றி எந்தவித நடவடிக்கையும்,இல்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.


SHARE

Related posts

Leave a Comment