விடுதலைக்கு ஆயத்தம் -10 கோடி அபராதத்தை செலுத்தினார் சசிகலா.

SHARE

சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். இவர், அடுத்தாண்டு (2021) ஜனவரி 27ம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது., அபராதத்தொகை ரூ.10 கோடியை செலுத்தாத பட்சத்தில் 2022ம் ஆண்டு பிப்.,27ம் தேதி தான் விடுவிக்கப்படுவார் எனவும் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே சிறைக் கைதிகளுக்கான நன்னடத்தை மற்றும் விடுமுறை காலம் உள்ளிட்ட சலுகைகளை பெற்று சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் விரைவில் வெளியே வர வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அபராதத்தொகை ரூ.10.10 கோடிக்கான காசோலையை சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர், நீதிபதி சிவப்பா முன் செலுத்தியுள்ளார்,


SHARE

Related posts

Leave a Comment