மீண்டும் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே விருப்பம் என சசிகலா தெரிவித்துள்ளார்.

SHARE

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றாக இணைந்து மீண்டும் ஆட்சி தொடர வேண்டும் என்பதே விருப்பம் என சசிகலா தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 73வது பிறந்தநாளையொட்டி தியாகராயநகர் இல்லத்தில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார்.
சென்னை தியாகராயநகர் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் அங்கு தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா,-
ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். விரைவில் தொண்டர்கள், பொது மக்களையும் சந்திக்க உள்ளேன். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுக்கு நான் துணை நிற்பேன். தொண்டர்கள் ஒன்றாக இணைந்து மீண்டும் ஆட்சி தொடர வேண்டும் என்பதே விருப்பம் என்றார்
இந்த நிகழ்ச்சியில் அமுமுக பொதுசெயலாளர் டி.டி.வி தினகரன் உடன் இருந்தார்.

முன்னதாக சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


SHARE

Related posts

Leave a Comment