செயற்கைக்கோளால் கட்டுபடுத்தப்படும் ரிமோட் துப்பாக்கியால் ஈரான் அணு விஞ்ஞானி கொலை. புதிய தகவலால் அதிர்ச்சி

SHARE

செயற்கை கோள் உதவியுடன் நடைபெற்ற உலகின் முதல் நேரடி கொலை.

ஈரான் அணு விஞ்ஞானியை கொலை செய்ய செயற்கைக்கோளால் கட்டுபடுத்தப்படும் ரிமோட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.


ஈரான் அணு விஞ்ஞானியை கொலை செய்ய செயற்கைக்கோளால் கட்டுபடுத்தப்படும் ரிமோட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
தெஹ்ரான் அருகே கடந்த மாதம் 27ம் தேதி விஞ்ஞானி மொஹ்சின் பாக்ரிஜாதே துப்பாக்கியால் சுடப்பட்டும், கார்குண்டு மூலமும் கொலை செய்யப்பட்டார்.

இதன்பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரான் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ஈரான் ராணுவ துணை கமாண்டர் அலி பதாவி  சொன்ன தகவலை மேற்கோள் காட்டி மெஹர் என்ற நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.


அதில் விஞ்ஞானி மொஹ்சின் கொலைக்கு செயற்கைக்கோளால் கட்டுப்படுத்தப்படும் ரிமோட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும், தொலைவிலிருந்து ஜூம் செய்யப்பட்டு, பிறகு செயற்கை நுண்ணறிவு மற்று முக அமைப்பை பயன்படுத்தி கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment