காந்தி சொல்லி தான் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் கருணை மனு தாக்கல் செய்தார்- ராஜ்நாத் சிங்

SHARE

 சாவர்க்கர் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அவரை ஆங்கிலேயரிடம் கருணை மனுக்களை தாக்கல் செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான் எனவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று (அக்.,12) சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: சாவர்க்கர் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. சிறையில் இருந்து விடுதலையாக ஆங்கிலேய அரசிடம் சாவர்க்கர் கருணை மனுக்களை தாக்கல் செய்ததாக மீண்டும் மீண்டும் பரப்பப்படுகிறது. சாவர்க்கரை ஆங்கிலேயர்களிடம் கருணை மனு தாக்கல் செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான்.

சாவர்க்கரின் ஹிந்துத்துவா கொள்கையை பலர் பலவாறாக கூறுகிறார்கள். “ஹிந்து” வார்த்தை எந்த மதத்துடனும் தொடர்புடையது கிடையாது. அது இந்தியாவின் புவியியல், அரசியல் அடையாளத்துடன் தொடர்புடையது. சாவர்க்கரை பொறுத்தவரை, ஹிந்துத்துவா கலாச்சார தேசியத்துடன் தொடர்புடையவர். அவரது ஹிந்துத்துவத்தை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


SHARE

Related posts

Leave a Comment