தமிழகத்தில் திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் இயங்க அனுமதி

SHARE

தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆனால் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 9,10,11 ,மற்றும்  12 ஆம் வகுப்புகள் வரும் 16 ஆம்தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லுரி பணியாளர் விடுதிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிஅனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிகப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளனது.50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட திரையரங்குகளுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

நவ. 2 முதல் கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கும்,காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புறநகர் ரெயில் சேவை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதியளிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்புல் தெரிவிக்கப்பட்டுள்ளது


SHARE

Related posts

Leave a Comment