திரைப்பட, தொலைக்காட்சி படப்பிடிப்பு- கட்டுப்பாடுகளுடன் அனுமதி

SHARE

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது


இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு,  திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

திரையுலகை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு பலன் கிடைத்துள்ளது.  இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் பேசும் போது, சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிதல் ஆகிய விதிகளை பின்பற்றி படப்பிடிப்புகளை நடத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளை நடத்தி கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.  இதன்படி,
படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
வெளிப்புற படப்பிடிப்பின் போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கையுறை கட்டாயம். படப்பிடிப்பு தளத்தில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.
படப்பிடிப்பின் போது நடிகர், நடிகை தவிர அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.
உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



SHARE

Related posts

Leave a Comment