இலங்கை முடங்கும் ஆபத்து – 10ஆம் தேதி வரை அனைத்தும் நிறுத்தம்

SHARE

எரிபொருள் பற்றாக்குறையால் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 10 தேதி வரை நாட்டை முடக்கி வைக்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. 

இலங்கையில் 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்குவதற்கு எரிபொருள் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் ஜுலை மாதம் 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பத்திரிகை தொடர்பாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதண்படி, துறைமுகம் சுகாதார பிரிவு, விவசாயம் போன்ற அச்சியாவசிய சேவைகளை மட்டும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜுலை மாதம் 10ஆம் திகதி வரை நகர்புற பள்ளிக்கூடங்கள் மற்றும் பல சேவைகளும் இயங்காதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளையும் நிறுத்தி வைப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 


SHARE

Related posts

Leave a Comment