யார் இந்த பொடி பையன்- காங்கிரஸ் அமளி சபை ஒத்திவைப்பு

SHARE

யார் இந்த பொடி பையன் என காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கொந்தளித்தால்.மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பி.எம்., கேர்ஸ் நிதி பற்றி விளக்கமளித்த மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், நேருவை விமர்சித்ததால் காங்., எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் இக்கூட்டத் தொடரில் முதல் முறையாக அவை ஒத்தி வைக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக பிரதமர் மோடி, மார்ச், 28ல், பி.எம்., கேர்ஸ் நிதியை தொடங்கினார். அறக்கட்டளை மூலம் இந்த நிதி நிர்வகிக்கப்படுகிறது. இதில் நிதி அளித்தவர்கள் குறித்த வெளிப்படையான விவரங்கள் இல்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. பி.எம்., கேர்ஸ் நிதியை பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரி வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் அதனை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில் இது தொடர்பான விவாதம் மக்களவையில் நடைபெற்றது.அதில் பேசிய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், “உயர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை அனைத்து நீதிமன்றங்களும் பி.எம்., கேர்ஸ் நிதியை சரிபார்த்துள்ளது.

நேரு பதிவு செய்யப்படாத ஒரு நிதியை அமைத்தார். சோனியா குடும்பம் பயனடைய அதற்கு அறக்கட்டளை அமைத்து அவரை அதன் தலைவராக்கியுள்ளீர்கள். இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.” என்றார்.

அனுராக்கின் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘யார் இந்த சிறுவன்? இந்த விவாதத்தில் நேரு எப்படி வந்தார்? நாங்கள் மோடியின் பெயரை இழுத்தோமா? ஆனால் இந்த பொடி பையன்…’ என காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கொந்தளித்தார். அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் இக்கூட்டத் தொடரில் முதல் முறையாக அவை ஒத்தி வைக்கப்பட்டது.


SHARE

Related posts

Leave a Comment