சவுந்தர்யா – எம்எல்ஏ பிரபுவுடன் செல்ல நீதிமன்றம் அனுமதி

SHARE

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கடந்த 5 ஆம் தேதி தியாகதுருகம் பகுதியை சேர்ந்த சௌந்தர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் பெண்ணின் தந்தை சாமிநாதன் 19 வயது நிரம்பாத தனது மகளை கடத்தி பிரபு திருமணம் செய்துகொண்டதாகவும் அவரிடமிருந்து பெண்ணை மீட்டுத்தரக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ பிரபு திருமணம் விவகாரம் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், எம்எல்ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதனையும் ஆஜர்படுத்த சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.  நீதிமன்ற உத்தரவின் படி, மனைவியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவேன் என எம்எல்ஏ பிரபு கூறினார்.
இந்த நிலையில் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. முன்னதாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவின் மனைவி சவுந்தர்யா நீதிமன்றம் வந்தார். அதையடுத்து  நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் சவுந்தர்யாவும், சுவாமிநாதனும் ஆஜர்படுத்தப்பட்டனர்.  அதன் பின்னர் மனுவை விசாரித்த நீதிபதிகள் இருவரும் கலந்துபேசி இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்று கூறி அவகாசம் அளித்து  தீர்ப்பை தள்ளி வைத்தனர். 
சற்று நேரத்தில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு மனைவி சவுந்தர்யா கனவருடன் செல்ல அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ர்றம் உத்தரவிட்டுள்ளது. கணவர் பிரபுவுடன் சேர்ந்து செல்ல சவுந்தர்யா விருப்பம் தெரிவித்ததால்  சுவாமிநாதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கு விசாரணை முடித்து வைத்தனர்.


SHARE

Related posts

Leave a Comment