143 செயற்கைக்கோள்களை செலுத்தி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை.

SHARE

அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் 143 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளது.

உலகின் முதல் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் . அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள இந்நிறுவனத்தை உலக பணக்காரரான எலான் மஸ்க் நிறுவினார். இவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி சோதனைகளில் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது.

கடந்தாண்டு நாசாவுடன் இணைந்து இரு விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியது. இதன்மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்னும் புகழை பெற்றது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் .

இந்நிலையில், பால்கன் ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 143 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. இந்த 143 செயற்கைக் கோள்களில் அரசின் செயற்கைக் கோள்களும் அடங்கும். அதிக அளவிலான செயற்கைக் கோள்களை ஒரே நேரத்தில் நிறுவி ஸ்பேஸ் எக்ஸ் புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களை நிறுவி இருந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


SHARE

Related posts

Leave a Comment