எஸ்.பி.பி.உடல் நிலை தொடர்ந்து கவலைகிடம்

SHARE

பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா தொற்றுகாரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவரது உடல் நிலை மோசமானதை தொடர்ந்து. அவர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

நுரையீரல் பிரச்சனை தொடர்ந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சையில் இருந்தார். கொரோனா தொற்று விலகியபோதும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் அவரை நிலை குலைய செய்தது

கடந்த 1 வாரத்திற்கு முன்பு அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. விரைவில் வீடு திரும்ப வேண்டும் என, விருப்பம் தெரித்தாக எஸ்.பி.பி.சரண் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று அவரது உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

இதனிடையே நடிகர் கமலஹாசன் மருத்துவமனைக்கு நேரில் சென்று எஸ்,பி.பி நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்

இன்று காலை சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு தீவிர சிசிச்சையளிக்கப்பட்டு வருகிறது.


SHARE

Related posts

Leave a Comment