ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து- இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம்

SHARE

கொரோனா தடுப்பு மருந்தான ‘ஸ்புட்னிக் -வி’ ஐ, இந்தியாவில் உள்ள முன்னணி மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டி ஆய்வகத்திற்கு விநியோகிக்க, ரஷ்யா ஒப்பு கொண்டுள்ளது.

இது தொடர்பாக ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘ஸ்புட்னிக் -வி’ மருந்தை, 300 மில்லியன் டோஸ் அளவு, இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் 100 மில்லியன் டோஸ் மருந்து இந்தியாவில் செயல்படும் டாக்டர் ரெட்டி ஆய்வகத்திற்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கான, இந்தியாவின் ஒப்புதல் பெறப்படும். இந்தியாவில், மருந்து தரக்கட்டுபாட்டு தர ஆணையத்திடம் அனுமதி பெற்ற பின்னர், தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதனை செய்யப்படும். விநியோகம் இந்த ஆண்டின் இறுதியில் துவங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டாக்டர் ரெட்டி ஆய்வகத்தின் துணை தலைவர் ஜிவி பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், ‘ஸ்புட்னிக்-வி’ மருந்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையில் நம்பத்தகுந்த முடிவுகள் கிடைத்துள்ளன. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், ‘ஸ்புட்னிக் -வி’ மருந்து சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்றார்.


SHARE

Related posts

Leave a Comment