இலங்கையில் பா.ஜ.கட்சி துவக்கம்

SHARE

இலங்கையில், பா.ஜ., கட்சி துவக்கப்பட்டுள்ளது. ஆனால், ”இந்தியாவில் உள்ள, பா.ஜ.,வுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை,” என, அக்கட்சியின் தலைவர் முத்துசாமி கூறியுள்ளார்.

இந்தியா மட்டுமின்றி, இலங்கை, நேபாளம் போன்ற அண்டை நாடுகளிலும், பா.ஜ., ஆட்சி அமைய, உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக, திரிபுரா முதல்வரும், பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவருமான பிப்லப் குமார் தேவ், சமீபத்தில் தெரிவித்தார்; இந்த பேச்சு, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இலங்கையில், இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில், புதிய கட்சி துவக்கப்பட்டுள்ளது, இது குறித்து, யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர், வி.முத்துசாமி, : இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற, புதிய அரசியல் கட்சியை துவக்கியதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

இலங்கையில் தமிழ் மக்களை முன்னிலைப்படுத்தி, பல கட்சிகள் உள்ளன. இருந்தாலும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை, அக்கட்சிகள் புறந்தள்ளிவிடுகின்றன. தமிழர்களின் நலனுக்காகவே, இலங்கை பா.ஜ., கட்சியை துவக்கியுள்ளோம்.ஆனால், எங்களுக்கும், இந்தியாவில் உள்ள, பா.ஜ.,வுக்கும், எந்த தொடர்பும் இல்லை. தமிழர்களுக்கான கல்வி, பொருளாதார மேம்பாடு, விளையாட்டு, கலாசார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.இலங்கை பா.ஜ., செயலராக, எம்.இந்திரஜித், பொருளாளராக, திலான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment