அடுத்துவரும் 6 வாரங்கள் இலங்கைக்கு ஆபத்துமிக்கது – சுகாதார துறை எச்சரிக்கை

SHARE

அடுத்துவரும் 6 வாரங்கள் இலங்கைக்கு ஆபத்துமிக்கது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

வழிக்காட்டல்களை பின்பற்றி மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்

இலங்கைக்கு அடுத்து வரும் 6 வாரங்கள் என்பது சவால் மிக்கதாகும். முகக்கவசம் அணியாத நாடுகளும் உள்ளன. அவ்வாறான நாடுகளின் சனத்தொகையில் சுமார் 60 வீதமானோர் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் இலங்கையை பொறுத்த வரையில் 51 வீதமானோருக்கு முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடுப்பகுதியில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை வழங்க முடியும்.

இந்த காலக்கட்டம் தான் மிக நெருக்கடியானது. ஏற்பட கூடிய மரணங்களை தவிர்க்க அரசாங்கம் முழுமையாக கவனம் செலுத்தி செயற்படுகின்றது.

தொற்றாளர்களில் 80 வீதமானோருக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் காணப்படுவதில்லை. இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும்.

மேல் மாகாணத்தில் 60 வைத்திய நிபுணர்கள் மற்றும் 200 வைத்தியர்கள் கொண்ட சிறப்பு குழு அறிகுறியற்ற தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளித்து வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார். 


SHARE

Related posts

Leave a Comment