இலங்கை,மற்றும் மலேசிய கவிஞர்கள் எஸ்.பி.பி.மறைவுக்கு இரங்கல்

SHARE

இலங்கையின் பிரபல திரை கவிஞர் அஸ்மின் எஸ்.பி.பி.மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு இது.

மலேசிய கவிஞரும் பத்திரிக்கையாளருமான குணாளன் நீ பவுர்ணமி என்ற கவிதையை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நீ….பௌர்ணமி

       செ.குணாளன்

பாடும் பௌர்ணமி
ஒன்று…
தன் பாடலை
முடக்கிக்கொண்டது…!

🎵 இசை மீட்டிய
குயிலின் கீதம்
யாவும்…
இன்று
முகாரியில்
முடிந்தது.,!

மாதவம்
செய்து பெற்ற மகாகலைஞனின்
ஒலிச் சிதறல்கள்
ஒளி மங்கி
ஓய்ந்தது.,!

இதயங்கள் ❤️
எதோ சொல்ல
வந்தாலும்
வார்த்தைகள்
அவன் பாடல்களையே
மீண்டும் மீண்டும்
முணுமுணுத்துத்
தேம்புகிறது…!

உனக்காக காத்திருந்தோம்
கண் விழிப்பாய்யென
பார்த்திருந்தோம்…!
ஆனால் ஏனோ….
காலம் உனை
காவு கொண்டான்…!

எங்கள் இரவுகளை
எல்லாம்
பகலாக்கிய
பௌர்ணமி
நீயல்லவா..?
எங்கள் சுவாசக்
குரல்களை
நின்
குரல் வீணையில்
மீட்டியபோதெல்லாம்…
எங்கள்
அகமும் புறமும்
புதுப்புது
ஞான ஓவியங்களை
வரைந்து கொண்டன..!

கவிமான்களின்
கவிதைகளை
எல்லாம்
காவிய கானமாக்கிய
🎸🎵…..
இசையோன் நீ…..!

காலையிலும்
மாலையிலும்
அந்திம வேளையிலும்
நின்னிசை
என்னிசையில்
ஊடல் கொண்டது…!

விட்டு விட்டு
கொட்டித் தீர்த்த
உன் பன்பலைப்
பாடல்கள்…
யாவும்
இனி மின்னூடகத்தில்
பதிவில் மட்டும்தானா…?
நாங்கள்
கனத்த இயத்தில்
உன்
கானக் குரலை
பூட்டி வைக்கிறோம்.,!
கண்ணீரை
கொட்டி வைக்கிறோம்…!
பாடும் பௌர்ணமியே
எங்களைத் துயராற்றில்
தள்ளி விட்டதேனோ?
சொல் பௌர்ணமியே..?

உன் பார்வையும்
பாடல்தான்
உன் பாடலும் பார்வைதான்…!
தமிழ்கூறும்
நல்லுலகில்
நீயும்
ஒரு வரலாறு…!
இசை 🎵 மழை
எஸ்.பி.பாலா
எங்களுக்கான
படும் நிலவு….!

இசையமைபாளர் காந்தி தனது அஞ்சலியை பதிவிட்டிருக்கிறார்.


SHARE

Related posts

Leave a Comment